மே 10-ல் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ரிலீஸ்…

vallavanukku pullum ayutham_00009பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் ஸ்ரீநாத் இயக்கத்தில், சித்தார்த் விபின் இசையமைப்பில் சந்தானம், ஆஷ்னா சவேரி மற்றும் பலர் நடிக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திரைப்படம் நாளை மறுநாள் மே 10ம் தேதி வெளியாகிறது.

‘கோச்சடையான்’ வெளியீடு மே 23ம் தேதிக்குத் தள்ளிப் போனதால், மே 16ல் வெளியாகவிருந்த இத்திரைப்படம் ஒரு வாரம் முன்னதாகவே வெளியிடப்படுகிறது.

இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது.

“அட்டகத்தி, கும்கி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, சூது கவ்வும், பீட்சா 2 வில்லா, பிரியாணி” ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தை ஸ்டுடியோ க்ரீன் வெளியிடுகிறது.

சந்தானம் முதன் முறையாக தனி கதாநாயகனாக நடிப்பதாலும், தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘மரியாதை ராமண்ணா’ படத்தின் ரீமேக் என்பதாலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

படத்திற்கு அனைரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ராமன்’ ஏமாற்றிய நிலையில் இந்த ‘வல்லவன்’ சிரிக்க வைப்பார் என்று நம்பலாம்.

 

Read Previous

‘கோச்சடையான்’ – மே 23ல் ரிலீஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Read Next

‘அணை’ பிரச்சனை தான் ரஜினியின் ‘லிங்கா’ கதையா ?