உங்க ஊருக்குலாம் சந்தானம் வர்றாருங்கோ…..

santhanam ashna zaveriநாலு படத்துல காமெடியா நடிச்சோமா, கல்லா கட்டணுமான்னு இல்லாம, கதாநயாகனா நடிச்ச பிறகு, என்ன ஆச்சி பாருங்க…

படத்தை ஓட வைக்கிறதுக்கு ஊரு, ஊரா ஓட வேண்டியிருக்கு.

பல படங்களில் பல ஹீரோக்களுக்கு நண்பனாகவும், காதலுக்கு ஐடியா கொடுப்பவராகவும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை சகட்டு மேனிக்கு கிண்டல் செய்து இன்றைய இளம் ரசிகர்களைக் கவர்ந்து முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சந்தானம்.

அவருக்குள்ளும் திடீரென கதாநாயகன் ஆசை எட்டிப் பார்க்க, நேரடி கதையைப் படமாக எடுத்தால் ஏதாவது சிக்கலானால் என்ன செய்வது என்று ரீமேக் படத்தில் நாயகனாக நடித்தார்.

தெலுங்கு ‘மரியாதை ராமண்ணா’வின் தமிழ் வடிவமான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ சந்தானத்தின் மரியாதையை தலை குப்புற தள்ளி விடாமல் கொஞ்சம் காப்பாற்றுகிறது என்கிறார்கள்.

இருந்தாலும் படத்தை இன்னும் ஓட வைக்க ரசிகர்களைத் தேடி ஓடி வருகிறார் சந்தானம். இன்று வேலூர், திருவண்ணாமலை, பாண்டிச்சேரி ஆகிய ஊர்களில் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்குகளில் ரசிகர்களை சந்திப்பதற்காக நேரடியாக வருகிறார். சும்மா இல்லை, கூடவே படத்தின்  கதாநாயகி ஆஷ்னா சவேரியும் வருகிறார்.

நாளை திருச்சி, நாளை மறுநாள் மதுரை, அடுத்த நாள் கோயம்புத்தூர் என பயணம் நீள்கிறது.

இதெல்லாம் ரசிகர்களுக்கு தெரியுதோ இல்லையோ, சந்தானம் கூட ஹீரோவா நடிக்கிற நடிகர்களுக்கும், அவரை வச்சி படம் எடுக்குற இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கண்டிப்பா தெரியணும்.

ஏன்னா, இதுவரைக்கும் தான் நடிச்ச எந்த படத்துக்காகவும் சந்தானம் இப்படி ஓடியாடி ரசிகர்களையும், மீடியாக்களையும் சந்திச்சதே இல்லை.

ஏதோ, நம்மளால முடிஞ்சது…..

 

Read Previous

‘கோச்சடையான்’ – 23ம் தேதி கண்டிப்பாக ரிலீஸ், தயாரிப்பாளர் அறிவிப்பு…

Read Next

‘டாஸ்மாக்’கில் ஷேர் கேட்கும் நடிகர்…