பாலா மாதிரி படம் எடுக்கணும்…ஒரு பெண் இயக்குனரின் ஆசை…

Poovarasam Pee Pee_00010‘பூவரசம் பீப்பீ’….தமிழ்த் திரையுலகில் இப்போது அனைவரும் உச்சரித்து வரும் ஒரு வார்த்தை…

இந்த படத்தின் புகைப்படங்களும், டிரைலரும் வெளியானதுமே ரசிகர்களின் ஆவலையும், எதிர்பார்ப்பையும் தூண்டி  விட்டது.

இப்படத்தை இயக்கியிருப்பவர் ஒரு பெண் இயக்குனர்..பெயர் ஹலிதா ஷமீம். ஆனால், படைப்பாளிகளை ஆண், பெண் என வகைப்படுத்தக் கூடாது என்கிறார் ஹலிதா.

“சிறுவர்களின் மனது தண்ணீர் போன்றது கனமான எதைப் போட்டாலும் உள்வாங்கிக் கொள்ளும். பால்ய காலத்தின் பள்ளி விடுமுறை காலம் அற்புதமானது. கிராமத்து சிறுவர்களுக்கு பீப்பி ஊதுவதும், பொன்வண்டு பிடிப்பதும், நீச்சல் அடிப்பதும், கில்லி விளையாடுவதும்தான் அவர்களுக்கு பிடித்தது.

அப்படி விளையாடித் திரியும் மூன்று சிறுவர்கள் ஒரு கொடூரமான வன்முறையை நேரில் பார்க்க நேரிடுகிறது. அந்த காட்சி அவர்களை எப்படி மாற்றுகிறது அதன் பாதிப்புகள் விளைவுகள் போக்குகள் என்ன என்பதை அவர்களின் மனநிலையில் இருந்து பேசுகிற படம் தான் ‘பூவரசம் பீப்பீ’.

halitha shameemஇது குழந்தைகள் படமல்ல. எல்லாருக்குமான படம். தியேட்டர் மூடுள்ள படம். எமோஷனலாக இருக்காது. அறிவு பூர்வமாக இருக்கும். அழவைக்காது. ரசிக்கவைக்கும். 

எனக்கு திரையுலகில்  நண்பர்கள் உண்டு. நட்சத்திர நடிகர்கள் பல நண்பர்கள் உண்டு.

நட்சத்திரங்கள்,கோடிக்கணக்கான ரூபாய் பட்ஜெட், பிரமாண்ட படம் இதிலெல்லாம் எனக்கு விருப்பமில்லை. கேரவான் என்றாலே எனக்கு அலர்ஜி.

பாலா சார் மாதிரி மனசுக்குப் பிடித்த கதையை யாருக்கும் சமரசமாகாதபடி எடுக்க ஆசை. என் அடுத்தடுத்த படங்கள் அப்படித்தான் இருக்கும். பண திருப்தியைவிட மன திருப்தியே எனக்கு முக்கியம்,” என்கிறார் ஹலிதா ஷமீம்.

‘பீப்பீ….’ ஊதி வரவேற்கத் தயாராகுங்கள் ரசிகர்களே…

Read Previous

‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ – ஹாலிவுட் பட அனுபவம் கிடைக்கும்…

Read Next

இன்றைய ரிலீஸ் – ‘கோச்சடையான்’ மட்டுமே…