‘கோச்சடையான்’ திரைப்படம் இதுவரை 100 கோடி அளவிற்கு சம்பாதித்துள்ளது. தமிழ்த் திரையுலகில் எந்த படமும் நிகழ்த்தியிராத சாதனையை சில நாட்களுக்குள் படைத்துள்ளது ‘கோச்சடையான்’.
கடந்த 23ம் தேதி உலகம் முழுவதும், சுமார் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 6 மொழிகளில் இப்படம் வெளியானது.
நடிப்புப் பதிவு சலனத் தொழில்நுட்ப முறையில் படமாக்கப்பட்ட இப்படம், ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலமே தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
படம் வெளியான வார முடிவில் இந்தியாவில் மட்டும் 30 கோடி ரூபாயையும், வெளிநாடுகளில் 12 கோடி ரூபாயையும் இந்த படம் வசூலித்துள்ளது. இந்தத் தொகை வரும் வாரங்களில் இன்னும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
பல மொழி சாட்டிலைட் உரிமைகள், ஆடியோ மற்றும் மியூசிக் உரிமைகள், விளம்பர உடன்பாடுகள் மற்றும் இதர வருவாய் என இந்த படம் 100 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் அவரை புதுத் தோற்றத்தில் பார்த்து வெகுவாக ரசிக்கிறார்கள். புதிய தொழில்நுட்பம் மூலமும் ரசிகர்களைக் கவரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் என ஈராஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.