நாயகியாக அறிமுகமாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆனாலும், இன்னும் அதே இளமையுடன், ஒல்லியான தேகத்துடன் இருந்து வருபவர் த்ரிஷா.
தெலுங்கில் சில வருடங்கள் முன்னர் வரை நம்பர்1 நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். காஜல் அகர்வால், சமந்தா, தமன்னா ஆகியோரின் போட்டியை சமாளிக்க முடியாமல் தெலுங்கிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார்.
தெலுங்கில் அவர் ஹீரோயினாக நடித்து கடைசியா வெளிவந்த படமான ‘தம்மு’ 2012ம் ஆண்டு வெளியானது. அதன் பின், அவர் எந்த தெலுங்கு படத்திலும் நடிக்கவில்லை. தமிழில் மட்டும் நடித்து வந்தார். ‘என்றென்றும் புன்னகை, சமர்’ ஆகிய படங்கள் கடந்த ஆண்டு வெளிவந்தது.
தற்போது ஜெயம் ரவி ஜோடியாக ‘பூலோகம்’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்போது, ஏறக்குறைய இரண்டு வருடம் கழித்து தெலுங்கில் நடிக்க உள்ளார். தெலுங்குத் திரையுலகின் அதிரடி ஆக்ஷன் ஹீரோவான பாலகிருஷ்ணா அடுத்து நடிக்கப் போகும் படத்தில் த்ரிஷாதான் ஹீரோயின்.
பாலகிருஷ்ணாவுடன் த்ரிஷா ஜோடி சேரும் முதல் படம் இது.
பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என த்ரிஷா ட்வீட் செய்துள்ளார்.