இன்று , ஜுன் 6, 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
உன் சமையலறையில்
பிரகாஷ்ராஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் பிரகாஷ் ராஜ், சினேகா, தேஜஸ், சம்யுக்தா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
மஞ்சப் பை
திருப்பதி பிரதர்ஸ், சற்குணம் சினிமாஸ் தயாரிப்பில் ராகவன் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைத்துள்ள படம். விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
கடந்த வாரம் வெளியாவதாயிருந்த ‘ஒகனேக்கல்’ படம் இந்த வாரம்தான் வெளியாகிறது.
ஒகனேக்கல்
எழில் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எம்.ஆர்.மூர்த்தி இயக்கத்தில் இசை – சரண் பிரகாஷ். பாபு, பிரித்வி, ஜோதி, மூர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அத்தியாயம்
ஆர்.எம்.ஏ. பிலிம் பேக்டரி தயாரிப்பில் யுவன் இயக்கத்தில் தமன் இசையமைத்துள்ள படம். சரண் செல்வன், வர்ஷா கே. பாண்டே மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.



