அமலா பால் – இயக்குனர் விஜய் திருமண நிச்சயதார்த்தம்…

amala paul vijay engagementநடிகை அமலா பால், இயக்குனர் விஜய் இருவரின் திருமண நிச்சயதார்த்தம் கிறிஸ்துவ முறைப்பட இன்று கேரள மாநிலம், கொச்சியில் உள்ள அலுவா என்ற இடத்தில் செயின்ட் ஜுட்ஸ் தேவாலயத்தில் நடந்தது.

மணப்பெண்ணான நடிகை அமலா பால் வெள்ளை நிறத்தில் நீளமான கவுன் ஒன்றை அணிந்திருந்தார். மணமகனான இயக்குனர் விஜய் சாம்பல் நிறத்தில் கோட் சூட் அணிந்திருந்தார்.

அமலா பாலின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இயக்குனர் விஜய் குடும்பத்தார் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

இயக்குனர் விஜய்யின் நெருங்கிய நண்பரான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் அவரது மனைவி சைந்தவியுடன் கலந்து கொண்டார்.

விஜய் – அமலா பால் திருமணம் இந்து முறைப்படி சென்னையில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

 

Read Previous

நான் நடிக்க ரெடி…அழைப்பு விடுக்கும் அஞ்சலி…

Read Next

உன் சமையலறையில் – விமர்சனம்