‘கிரீடம், பொய் சொல்லப் போறோம், மதராசப்பட்டிணம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா’ படங்களின் இயக்குனர் விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடைபெற்றது.
நடிகர்கள் விக்ரம், ஆர்யா, இயக்குனர்கள் மணிரத்னம், பாலா, சமுத்திரக்கனி, தயாரிப்பாளர்கள், திரையுலகப் பிரபலங்கள் என பலர் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
இயக்குனர் விஜய், அமலா பால் இருவரும் தெய்வத் திருமகள், தலைவா ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்த போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரது பெற்றோர்களும் திருமணத்திற்கு சம்மதம் தந்தனர்.
சில நாட்களுக்கு முன் கேரளாவில் மலையாளத் திரையுலகத்திற்கென முன்னதாகவே திருமண வரவேற்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இன்று மாலை சென்னையில் மீண்டும் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.
மணமக்களுக்கு நமது வாழ்த்துகள்…