சிவகார்த்திகேயனை சிக்க வைத்த ‘திருப்பதி’…

sivakarthikeyan maan karate_00022 குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளவர் சிவகார்த்திகேயன். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றி அவரை எங்கேயோ கொண்டு போய் விட்டது. அதன் பின் அவருடைய சம்பளம் கிடுகிடுவென உயர்ந்தது. பல முன்னணி தயாரிப்பாளர்கள் கூட சிவகார்த்திகேயனுக்கு 10 கோபடிரூபாய் வரை சம்பளம் தரத் தயாராக இருந்தார்கள் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் படப்பிடிப்பில் இருக்கும் போதே சிவகார்த்திகேயனை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் அவர்கள் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அந்த படத்திற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகவும் கையெழுத்திட்டுள்ளார்கள். ஆனால், அந்தப் படம் வெளிவந்ததும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்திற்கு போய்விட்டது.

இந்த சூழ்நிலையில் சிவகார்த்திகேயன், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் சம்பளத்தை உயர்த்தித் தரவேண்டுமென கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், அதற்கு லிங்குசாமியோ, அவரது தம்பி சுபாஷ் சந்திரபோஸோ சம்மதிக்கவில்லையாம். ஒப்பந்தத்தில் போட்டபடிதான் சம்பளம் தருவோம் அதற்கு மேல் ஒரு ரூபாய் கூட தரமுடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.

சிவகார்த்திகேயன் சார்பாக சிலர் பேசியும் கூட பிரதர்ஸ் நிறுவனம் பிரச்சனை செய்கிறதாம். தனக்கு இப்படி நேர்ந்தால் லிங்குசாமி அதற்கு சம்மதிப்பாரா என்கிறார்கள்.

திருப்பதி பிரதர்ஸ் என பெயரை வைத்துக் கொண்டு திருப்தியாக சம்பளம் தராமல் திருப்பதிக்கேயுரிய மொட்டை போட்டு விடுவார்கள் போலிருக்கிறதே என கோடம்பாக்கத்தில் கேலி பேசுகிறார்களாம்.

 

Read Previous

அமலா பால் – இயக்குனர் விஜய் திருமணம்

Read Next

இளமைக்குத் திரும்புகிறார் அஜித்…