நயன்தாரா தற்போது ‘இது நம்ம ஆளு, தனியொருவன், நண்பேன்டா’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதோடு, அடுத்து சூர்யா ஜோடியாக வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்திலும் ஹீரோயினாக நடிக்கப் போகிறார்.
இதனிடையில் அறிமுக இயக்குனர் அஷ்வின் இயக்கத்தில், ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்க உள்ள ஒரு புதிய திகில் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இவருக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படமாக இப்படம் உருவாகிறது. ‘நெடுஞ்சாலை’ படத்தில் நடித்த ஆரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நயன்தாரா தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறாராம். இருந்தாலும் சமீபத்தில் அவர் நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த ‘நீ எங்கே என் அன்பே’ படு தோல்வியைத் தழுவியது.
படத்தின் எந்த வித விளம்பர நிகழ்ச்சிகளுக்கும் நயன்தாரா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்புறம் படம் எப்படி ஓடும். நயன்தாரா படங்களில் நடிப்பதோடு அந்த படங்கள் ஓட வேண்டும் என்பதற்காக பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால்தான் தொடர்ந்து வெற்றிப் பட நாயகி என்ற பெயரை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் கோடம்பாக்க வல்லுனர்கள்…