தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பட்டப் பெயர் இல்லாத நட்சத்திரங்களே இல்லை எனலாம் . நகைச்சுவை நடிகர்களுக்குக் கூடி பட்டம் உண்டு. நடிகைகளுக்குத்தான் இன்னும் யாரும் பட்டப் பெயர் வைக்காமல் இருக்கிறார்கள். அப்படியும் அந்தக் காலத்தில் ‘கன்னடத்துப் பைங்கிளி’, ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்று அழைக்கப்பட்டவர்களும் உண்டு.
தமிழ் சினிமாவில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களுக்கு எக்கச்சக்கமான பட்டப் பெயர்கள் இருக்க தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே, ‘மக்கள் தளபதி’ என்ற பட்டப் பெயருடன் இனி அழைக்கப்பட உள்ளார்.
அவர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ‘என் வழி தனி வழி’ படத்தின் டைட்டில் கார்டில் இவருக்கு ‘மக்கள் தளபதி’ என்ற பட்டம் தரப்பட்டிருக்கிறது. தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இப்படியொரு பட்டப் பெயருடன் வரப்போகிறாராம் ஆர்.கே.
ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர் கே நடிக்கும் ‘என் வழி தனி வழி’ படத்தில் மீனாட்ஷி தீட்சித், பூனம் கவுர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இதற்கு முன்பு ஷாஜி கைலாஷ், ஆர் கே இணைந்த ‘எல்லாம் அவன் செயல்’ மிகப் பெரிய வெற்றி பெற்றது. தற்பொழுது ‘என் வழி தனி வழி’ யில் ஹீரோவான ஆர்.கே.விற்கு ஒரு மாஸ் ஹீரோவிற்கான அனைத்து பில்டப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளதாம்.