‘அஞ்சான்’ படத்தின் பாடல்கள் வெளிவந்து ஒரு நாளைக் கடந்த நிலையில் படத்தின் பாடல்களைப் பற்றிய எதிர்பார்ப்பு இருக்கும். ‘தீபாவளி, பையா, வேட்டை’ படங்களுக்குப் பிறகு இயக்குனர் லிங்குசாமி, இசையைமப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா மீண்டும் இணைந்திருக்கும் படம்.
படத்தின் பாடல்கள் எப்படியிருக்கிறது என்பதை பாடல் வெளியீட்டின் போது இயக்குனர், நடிகர் பார்த்திபன் பேசியதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அதுவே ஒரு விமர்சனம் போலத்தான்…
“பாட்டு கேட்டேன், ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு மாதிரி இருந்தது, ஒரு பாட்டு சூர்யா மாதிரி சூப்பரா இருந்தது. இன்னொரு பாட்டு வந்து லிங்குசாமி மாதிரி இருந்தது, அதாவது ரொம்ப லவ்வபுளா இருந்தது. இன்னொரு பாட்டு யுவன் மாதிரி, ரொம்ப யூத்ஃபுல்லா இருந்தது. ஒரு பாட்டு வந்து யு டிவி, திருப்பதி பிரதர்ஸ் மாதிரியே இருந்தது, அதாவது ரொம்ப ரிச்சா, ரொம்ப காஸ்ட்லியா இருந்தது. இன்னொரு பாட்டு வந்து, சமந்தா மாதிரி இருந்தது. சமந்தான்னா ரொம்ப செக்ஸியா இருந்தது.
‘கண் ஜாடை செய்தாலே…’ பாட்டு கேட்கும் போதே பார்க்கணும்னு தோணுச்சு. ஆனால், பார்க்கும் போது நோக்கம் மாறிடுச்சி. அதாவது….என்ன சொல்றது நானு…மெய் மறக்க செஞ்சது அந்த பாட்டு. இப்படி ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு மாதிரி இருந்தது. சூர்யா சார் பாடின பாட்டு வந்து, சூர்யாவோட ரசிகர்கள் மாதிரி ரொம்ப மாஸா இருந்தது,” என்றார் பார்த்திபன்.
பார்த்திபன் எந்தெந்த பாடல்களை யாரோடு ஒப்பிட்டார், அது உண்மைதானா என்பதை ‘அஞ்சான்’ பாடல்களைக் கேட்டுப் கேட்டுப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்…
அஞ்சான்…பாடல்கள் விவரம்
இசை – யுவன் ஷங்கர் ராஜா
1. பேன்ங்…பேன்ங்…
எழுதியவர் – மதன் கார்க்கி
பாடியவர் – கே.ஜி. ரஞ்சித்
2. ஒரு கண் ஜாடை…
எழுதியவர் – விவேகா
பாடியவர்கள் – பென்னி தயாள், ஷ்வேதா பண்டிட்
3. ஏக் தோ தீன்…
எழுதியவர் – நா.முத்துக்குமார்
பாடியவர்கள் – சூர்யா, ஆன்ட்ரியா
4. காதல் ஆசை…
எழுதியவர் – கபிலன்
பாடியவர்கள் – யுவன்ஷங்கர் ராஜா, சூரஜ் சந்தோஷ்
5. சிரிப்பு என்…
எழுதியவர் – விவேகா
பாடியவர் – எம்.எம். மானஸி