‘பீட்சா’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘ஜிகர்தண்டா’ படத்தை இயக்குனர் ஷங்கர் பாராட்டியிருக்கிறார்.
இது குறித்து அவருடைய ஃபேஸ்புக் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜிகர்தண்டா சூப்பர்ப், எதிர்பாராத, நகைச்சுவையுடன் கூடிய த்ரில்லிங்கான, புது அனுபவத்தைத் தரக் கூடிய, அனைவரும் பிரமாதமாக நடித்துள்ள, சிறப்பாக எழுதப்பட்டுள்ள படம், கலக்கல் சுப்புராஜ்,” என பாராட்டித் தள்ளியுள்ளார்.
ஒரு ஆக்ஷன் காமெடியாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, கருணாகரன், அம்பிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மதுரையை மையமாகக் கொண்ட இந்தப் படம் கொஞ்சம் நீளமாக உள்ளது என்று விமர்சனம் எழுந்தாலும் இளம் ரசிகர்கள் படத்தை வெகுவாக ரசித்து வருவதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.