‘அஞ்சான்’ டீஸர், டிரைலர் – 43 லட்சம் ஹிட்ஸ்…

anjaan trailer news‘அஞ்சான்’ படத்தின் இரண்டு நாட்களுக்கு முன்பு கடந்த வியாழனன்று ‘யூ டியூப்’ வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த நான்கு நாட்களுக்குள் சுமார் 11 லட்சம் பார்வையாளர்கள் அந்த டிரைலரைப் பார்த்துள்ளனர்.

சூர்யா நடித்து வெளிவந்த மற்ற எந்த படங்களையும் விட இந்த ‘அஞ்சான்’ படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. ரஜினிக்குப் பிறகு விஜய், அஜித்திற்குத்தான் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்று சொல்வார்கள். ஆனால், அவர்கள் படங்கள் ஏற்படுத்தாத ஒரு தாக்கத்தை இந்த ‘அஞ்சான்’ படம் இணைய தளங்களில் ஏற்படுத்தியிருப்பது ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் உள்ளது.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் கடந்த மாதம் வெளியான பாடல்கள் அதிரடியாக அமைந்து படத்திற்கு நல்ல விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது.

‘அஞ்சான்’ படத்தின் டீஸர் கடந்த மாதம் 5ம் தேதி வெளியாகி ஒரே நாளிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை ரசிக்க வைத்து, இரண்டு நாட்களில் அது 20 லட்சத்தைத் தொட்டது. இதுவரை ‘அஞ்சான்’ டீஸரை 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.

இப்போது ‘அஞ்சான்’ படத்தின் டிரைலருக்கும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. யூ டியுப் இணைய தளம் மூலம் இதுவரை ‘அஞ்சான்’  டீஸர் மற்றும் டிரைலரை பார்த்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை இணையதள வடிவிலான படத்தின் பிரமோஷனை ‘அஞ்சான்’ படம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

Read Previous

‘அஞ்சான்’ – சென்னையில் மட்டும் 40 தியேட்டர்களில் ரிலீஸ்…

Read Next

மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் வடிவேலு…