மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் வடிவேலு…

vadivelu yuvaraj newsதன் நகைச்சுவையால் பலரையும் குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்து, கவலைகளை மறக்கடித்து, அனைவரின் குடும்பத்திலும் ஒருவராய் உறவாடப்பட்ட வடிவேலு சிறு இடைவேளைக்குப் பிறகு ‘தெனாலிராமன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து மீண்டும் தன் நகைச்சுவை பயணத்தைத் துவங்கினார்.

‘தெனாலிராமன்’ படமும் வடிவேலுவின் நகைச்சுவையும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

தற்போது வடிவேலு மீண்டும் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘தெனாலிராமன்’ படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கவிருக்கிறார். 1970களில் நடக்கும்படியான கதையைக் கொண்டது இப்படம்.

ஒஹோ பிக்சர்ஸ் சார்பாக ஜி.ராம்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு இசை –  இமான், ஒளிப்பதிவு – கோபிஅமர்நாத், கலை – தோட்டாதரணி, படத்தொகுப்பு – ராஜாமுகமது.

படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது.

Read Previous

‘அஞ்சான்’ டீஸர், டிரைலர் – 43 லட்சம் ஹிட்ஸ்…

Read Next

‘முதல் மரியாதை’ – பிடிக்காமல் இசையமைத்த இளையராஜா…