அஞ்சான் – ஒரே நாளில் 11.5 கோடி வசூல்…

Anjaan 2407_00012லிங்குசாமி இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் சூர்யா, சமந்தா, வித்யுத் ஜமால், மனோஜ் பாஜ்பாய் மற்றும் பலர் நடித்த ‘அஞ்சான்’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது. தெலுங்கில் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டும் வெளியாகியுள்ளது.

நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 11.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளிலும் நல்ல வசூலைக் குவித்து வருவதாகவும் தெரிவிக்கிறார்கள். இங்கிலாந்து மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் வெளியான இப்படம் அங்கு மட்டும் 41.59 லட்ச ரூபாய் வசூலித்துள்ளதாம்.

ஆஸ்திரேலியாவில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாள் வசூலாக 22.82 லட்ச ரூபாய் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளதாம்.

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் இந்த நாட்களில் எண்ணற்ற திரையரங்குகளில் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாலும் வார முடிவு வசூல் தொகை இன்னும் அதிகமாகவும் வாய்ப்பிருக்கிறதாம்.

சூர்யாவின் படங்களில் இந்தப் படம் ஓபனிங்கில் புதிய சாதனையை நிகழ்த்தியிருப்பதாக திரையரங்கு வட்டாரங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

விக்ரமைப் பார்த்து நடிப்பைக் கற்ற ‘சரபம்’ சலோனி…

Read Next

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – விமர்சனம்