நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள ‘49 ஓ’ படத்தின் டிரைலர் வரும் 12ம் தேதியன்று வெளியாக உள்ளது.
ஸீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் சிவபாலன் தயாரித்துள்ள இப்படத்தை கௌதம் மேனன் உதவியாளரான ஆரோக்கியதாஸ் இயக்கியுள்ளார்.
இதே படத் தயாரிப்பு நிறுவனம்தான் கிருஷ்ணா, மகாபா ஆனந்த், மோனல் கஜ்ஜார் நடித்துள்ள ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தை 12ம் தேதி வெளியிடுகிறது. அந்தப் படத்துடன் ‘49 ஓ’ படத்தின் டிரைலரையும் இணைத்துள்ளனர்.
12ம் தேதி முதல் திரையரங்குகளில் கவுண்டமணியின் கலக்கலான ‘49 ஓ’ டிரைலரைப் பார்த்து ரசிக்கலாம். அதற்கடுத்து படத்தையும் விரைவில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.