சிம்பு நடித்து கடைசியாக வெளிவந்த படம் ‘போடா போடி’. அந்தப் படம் வெளிவந்து சுமார் மூன்று வருடங்களாகிவிட்டது. அதே சமயம் அவர் நீண்ட நாட்களாக நடித்து வரும் ‘வாலு, வேட்டை மன்னன்’ ஆகிய படங்கள் எப்போது வெளிவரும் என்றே ஒரு தெரியாத நிலை இருந்து வருந்தது.
அவருடைய சொந்தத் தயாரிப்பில் மீண்டும் நயன்தாரா ஜோடியாக பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே சிம்பு தரப்பிலிருந்து அவருடைய ரசிகர்களுக்காக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, நவம்பர் மாதம் முதல் சிம்பு நடித்துள்ள படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர உள்ளதாம்.
“வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நான் எப்போதோ நடித்து முடித்துவிட்டேன். இரண்டு படங்களையும் ஒரே தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்துள்ளது. சில உள்ளார்ந்த பிரச்சனைகளால் அந்தப் படங்களின் வெளியீடு தாதமாகின. அவை இப்போது தீர்க்கப்பட்டு ‘வாலு’ படம் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது.
என்னுடைய ரசிகர்களைப் போலவே நானும் என்னுடைய படங்களைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன். ‘இது நம்ம ஆளு’ படத்தைப் பொறுத்தவரையில் படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பில் உள்ளோம். டிசம்பர் மாதம் ‘இது நம்ம ஆளு’ படத்தை கண்டிப்பாக கண்டு ரசிக்கலாம்.
என்னுடைய ரசிகர்களுக்காக சொல்லிக் கொள்வது என்னவென்றால் இனி எந்த இடைவெளி இல்லாமல் என்னுடைய படங்கள் தொடர்ந்து வெளிவரும் என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்,” என சிம்பு தெரிவித்துள்ளார்.