அர்ஜுனின் ஜெய்ஹிந்த் – 2 – இசை வெளியீடு

Jai Hind 2 - Audio Launch_00013ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ‘அர்ஜுனின் ஜெய்ஹிந்த் -2 ‘. கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார்.  சிம்ரன்கபூர் என்ற மும்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார்.  மற்றும் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி , மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமீத்தி வாரி, பேபி யுனிதா ஆகியோர்  நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அர்ஜுன் பேசியது..

இந்த இசை வெளியீட்டு விழாவை ஜெய்ஹிந்த் படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற் போல் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன் எங்களுக்கு ரியல் ஹீரோவான மேஜர் முகுந்த் அவர்களின் ஞாபகம் தான் வந்தது.தேசத்திற்காக உயிர் துறந்த அந்த மேஜரின் குடும்பத்தை அழைத்து அவர்கள் முன்னிலையில் இந்த விழாவை நடத்த விரும்பினேன் முதலில் தயங்கிய அவர்கள் பிறகு ஒத்துக்கொண்டார்கள்.அவர்களை மேடைக்கு  அழைத்ததன் மூலம் இந்த விழா சிறப்பு பெற்றுள்ளது.

விழா மேடையில் மேஜர் முகுந்தனின் தந்தை வரதராஜன் பேசியது….

‘ஜென்டில் மேன்’ படத்தைப் பார்த்து அர்ஜுனின்  தீவிர ரசிகரான முகுந்த் ஆக்‌ஷன் படங்களை விரும்பிப் பார்ப்பான். இந்த ஜெய்ஹிந்த் படத்தை பார்க்க அவன் இல்லை. இருந்தாலும் இந்த விழாவில் நாங்கள் கலந்து கொண்டது  எங்களுக்கு மகிழ்ச்சி,” என்று கூறினார்.

 இயக்குனர் பாலா பேசியதாவது….

“வழக்கமாக இது மாதிரி விழாக்களுக்கு நான் செல்வதை தவிர்ப்பேன். அர்ஜுன் என்னிடம் மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தினர் கலந்து கொள்ள இருப்பதை சொன்ன உடனே  நான் ஒத்துக்கொண்டேன். நான் இதுவரை எந்த சினிமாக்காரர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டது இல்லை. இந்த குடும்பத்தினருடன் நான் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்,” என்று சொல்லி அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசியதாவது….

“இது அர்ஜுன் இயக்கத்தில் வரும் எட்டாவது படம். அர்ஜுன் இயக்கத்தில் வெளியான எல்லாப் படங்களும் வெற்றிப் பெற்றுள்ளது. இந்தப் படமும் வெற்றிபெறும்,” என்று பாராட்டினார்.

விழாவில் ஐஸ்வர்யா அர்ஜுன், மனோபாலா, கானாபாலா, மயில்சாமி, ஆகியோரும் பேசினார்கள்.

இயக்குனர் பாலா இசைத் தட்டை வெளியிட  மேஜர்முகுந்தின் மகள் பேபி ஆர்ஷியா மற்றும் படத்தில் நடித்துள்ள பேபி யுவினா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Read Previous

‘ஐ’ கடைசிக் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமானது…

Read Next

தமிழ்நாடும், தமிழ் மக்களும் போட்ட பிச்சை…ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கம்…