சி.வி.குமாரின் தயாரிப்பில் மூன்று புதிய படங்கள்…

cv kumar production news“பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, சரபம்” உள்ளிட்ட பல வெற்றிப் படங்களையும் சித்தார்த் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் ‘எனக்குள் ஒருவன்’ படத்தையும் தயாரித்துள்ள சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தற்போது மேலும் மூன்று புதிய படங்களுக்கு நேற்று பூஜை போட்டு ஆரம்பித்துள்ளனர்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனத்துடன் இணைந்து ‘இன்று நேற்று நாளை’ என்ற புதிய படத்திற்கு பூஜை போட்டு படப்பிடிப்பை நேற்று துவக்கியுள்ளனர்.

இயக்குனர் நலன் குமாரசாமியிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய ரவி இப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார். விஷ்ணு, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கான ஒளிப்பதிவை வசந்த் (அறிமுகம்) மேற்கொள்கிறார். இசையை “ஹிப் ஹாப் தமிழா” புகழ் ஆதியும், படத்தொகுப்பை லியோ ஜான்பாலும் கவனித்து கொள்கின்றனர்.

அடுத்து ‘சூதுகவ்வும்’ படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த நலன் குமாரசாமி அவருடைய இரண்டாவது படத்தை சி.வி.குமாருக்காக இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ‘கை நீளம்’ எனப் பெயரிட்டுள்ளனர்.- ‘சூதுகவ்வும்’ படத்தின் இரண்டாம் அத்தியாயமாக இப்படம் உருவாக உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தினேஷ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, லியோ ஜான்பால் படத்தொகுப்பை கவனிக்க உள்ளார்.

அபி & அபி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படப்பிடிப்பு 12.12.2014 அன்று துவங்கவுள்ளது.

மூன்றாவது படத்தை ‘பீட்சா, ஜிகர்தண்டா’ என இரண்டு வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘இறைவி’ என பெயரிட்டிருக்கிறார்கள்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கேவிமிக் ஏரி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

ஒரு தயாரிப்பாளர் ஒரே நேரத்தில் மூன்று படத்தைத் தயாரிக்கவிருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.

Read Previous

சிறைச்சாலையில் மையம் கொள்ளும் ‘புறம்போக்கு’…

Read Next

லயோலா கல்லூரியில் ‘பூஜை’ இசை வெளியீடு…