‘அவம்’ படத்திற்காக கமல்ஹாசன் பாடிய பாடல்…

kamalhaasan - avamவிஜே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் விஜய் வில்வாகிரிஷ் இயக்கத்தில் சுந்தர்மூர்த்தி இசையில் உருவாகிவரும் படம் ‘அவம்’.

இப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கமல்ஹாசன் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

இந்த பாடல் ஒரு இளைஞனின் தனிமையையும் கவலையையும் உணர்ச்சிப்பூர்வமாக வெளிபடுத்தும் பாடல் என்பதால் பாடகர் இப்பாடலின் வரிகளை உணர்ந்து அதன் உண்மையை வெளிபடுத்தும் வகையில் பாடவேண்டியதிருந்தது.

கமல்ஹாசன் வரிகளின் தன்மையை உணர்ந்து தன் குரலின் வாயிலாக பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார் என்றால் அது மிகையாகாது. மதன் கார்க்கியின் கருத்துமிக்க வரிகள் இன்றை இளைய தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்கிறார்கள் படக் குழுவினர்.

சாதாரண வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் கார்த்திக், ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். அவனது அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணை சந்தித்ததும், அந்த பெண்ணால் அவன் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள், அந்த சம்பவத்தால் நிகமும் நிகழ்வுகளே படத்தின் கதை கரு.

பல புதுமுகங்களுடன் அனுபவமான நடிகர்கள் நடிக்கும் இப்படத்தில், கௌரவ் நாயகனாக நடிக்க, கர்நாடகாவைச் சேர்ந்த காவ்யா ஷேட்டி நாயகியாக நடிக்கிறார். விவேக் லெஸ்தர் உத்துப் வில்லனாக நடிக்க, கார்த்திக் வில்வாகிரிஷ், காஜல் வசிஷ்ட், எம்.எஸ்.பாஸ்கர், அனுபமா குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

குகன் எஸ். பழனி படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார், இவர் ராஜா ராணி படத்தில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். ஆதியப்பன் சிவா படத்தொகுப்பு வேலைகளை கவனித்துக் கொள்ள, அயனா ஜெயகாந்த் கலை இயக்கத்தை கையாள்கிறார்.

Read Previous

லயோலா கல்லூரியில் ‘பூஜை’ இசை வெளியீடு…

Read Next

கிளாமர்னா என்ன….ஸ்ருதிஹாசன் கேள்வி…