தமிழ்த் தொலைக்காட்சிகளில் அடுத்த வாரம் தீபாவளி தினமான அக்டோபர் 22, புதன் கிழமையன்று ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்களைப் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. இவற்றில் ஒரு சில திரைப்படங்களின் ஒளிபரப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில திரைப்படங்களின் ஒளிபரப்பு நேரம் பற்றி இன்னும் அறிவிப்பு செய்யப்படாமலே உள்ளது.
ஜெயா டிவி
கோச்சடையான் – சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் இந்தியாவில் உருவான முதல் மோஷன் கேப்சரிங் திரைப்படம். ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சன் டிவி
ஜில்லா – ஆர்.டி.நேசன் இயக்கத்தில் டி.இமான் இசையைமப்பில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அஞ்சான் – லிங்குசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சூர்யா, சமந்தா, வித்யுத் ஜமால் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
விஜய் டிவி
நான் சிகப்பு மனிதன் – திரு இயக்கத்தில் ஜிவி. பிரகாஷ்குமார் இசையில் விஷால், லட்சுமி மேனன், இனியா மற்றும் பலர் நடித்த படம். இப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
மான் கராத்தே – திருக்குமரன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா மற்றும் பலர் நடித்த படம். மாலை 6 மணிக்கு இப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
ஜீ தமிழ்
யாமிருக்க பயமே – டீகே இயக்கத்தில் பிரசாத் இசையமைப்பில் கிருஷ்ணா, கருணாகரன், ரூபா மஞ்சரி, ஓவியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
மஞ்சப் பை – ராகவன் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்த படம். இப்படம் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
தீபாவளியன்று பல புத்தம் புதிய திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளதால் அன்றைய தினம் திரையரங்குகளுக்கு பெண்களின் கூட்டம் குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளது…
