சிவகார்த்திகேயனின் ‘காக்கிச் சட்டை’…

sivakarthikeyan kakki chattai newsநடிக்க வர்றதுக்கு முன்னாடி என்னவாக ஆசைப்பபட்டீங்கன்னு நடிகர், நடிகைகள் கிட்ட கேட்டால் ‘டாக்டர் இல்ல இஞ்சினியர்’ ஆக ஆசைப்பட்டன்னுதான் சொல்வாங்க. இதெல்லாம், அந்தக் காலம். ஆனால், இப்பலாம் யாரும் இப்படி பொய் சொல்றதில்லை….

அப்பா போலீஸ்ல இருந்ததால் அப்பா மாதிரியே போலீஸ் ஆகணும்னு நிஜ வாழ்க்கையில ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன், ‘காக்கிச் சட்டை’ படத்துல போலீசா நடிக்கிறாரு.

சிவகார்த்திகேயன் சீரியசா, போலீஸ் கேரக்டர்ல நடிக்கிறாரான்னு அதிர்ச்சியடைய வேணாம். கொஞ்சம் ‘சிரிப்பு போலீஸ்’ ஆவும் கதை நகருதாம். அவருக்கும் உயர் அதிகாரியான பிரபுவுக்கும் இடையில நடக்கிற காட்சிகள், காதல் காட்சிகள் எல்லாத்துலயும் கலகலப்பு கண்டிப்பா இருக்குமாம்.

மத்த போலீஸ் ஹீரோ மாதிரி ஒரே அடியில பத்து வில்லனைப் பந்தாடற மாதிரிலாம் காட்சியமைக்காமல் யதார்த்தமான காட்சிகளா படத்துல வச்சிருக்காராம் இயக்குனர் துரை செந்தில்குமார். ‘எதிர் நீச்சல்’ படத்திற்குப் பிறகு இவரும், சிவகார்த்திகேயனும் மீண்டும் இணையற படம் இது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றிகரமான ஜோடியான சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யா மீண்டும் இந்தப் படத்துலயும் காதலிக்கிறாங்க.

படத்துக்காக உடம்பை ஏத்த சிவாவும் எவ்வளவோ ட்ரை பண்ணாராம், ஆனால், நாலஞ்சி கிலோ மட்டும்தான் உடம்பு ஏறுச்சாம். இதையெல்லாம் எப்படி சார் கெட்டப் சேஞ்சுன்னு சொல்றதுன்னு அவரே சொல்றாரு.

படத்தோட ஷுட்டிங்கலா முடிஞ்சி, மத்த வேலைகள் நடந்துட்டிருக்கு…சீக்கிரமே படத்தோட ரிலீஸ் பத்தின அறிவிப்பு வருமாம்…

Read Previous

‘கத்தி’ ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்க…

Read Next

ஏ.ஆர்.ரகுமான் இசையில் 3 படங்கள் ரெடி…