ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் டீகே இயக்கத்தில் பிரசாத் இசையைமப்பில் கிருஷ்ணா, கருணாகரன், ஓவியா, ரூபா மஞ்சரி மற்றும் பலர் நடித்து சில மாதங்களுக்கு முன் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘யாமிருக்க பயமே’.
ஹோட்டலாக மாற்றப்பட்ட ஒரு பழங்கால வீட்டிற்குள் நடமாடும் பேய்களைப் பற்றிய நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமான இந்தப் படம் கன்னடத்தில் ‘நமோ பூத ஆத்மா’ என்ற பெயரில் தயாராக வெளியாக உள்ளது.
இப்படத்தில் ரூபா மஞ்சரி நடித்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரத் தேர்வு நடந்து வருகிறது.
கன்னடத்திலும் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனமே இப்படத்தைத் தயாரிக்கிறது.