‘C2H’-ன் முதல் படம் ஜனவரி 15 -ல் வெளியீடு…

Director Cheran's C2H Press Meet News

இயக்குனர் சேரன் ஆரம்பித்துள்ள ‘C2H’ நிறுவனம் மூலம் ஜனவரி 15, 2015ம் தேதியன்று முதல் படமாக சேரன் இயக்கிய ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் வெளியிடப்பட உள்ளது.

வீட்டுக்கு வீடு சினிமாவைக் கொண்டு போய்ச் சேர்க்கும் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் மூலம் 50 ரூபாய் விலையில் பல புதுப்படங்களின் டிவிடி மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட உள்ளது.

இந்த நிறுவனத்தின் தொடக்க விழா சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. அனைத்து கட்டமைப்புகளையும் முடித்து , தற்போது ஜனவரி 15 முதல் படத்தை வெளியிட உள்ளார்கள்.

இது குறித்து இன்று ‘C2H’ நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து சேரன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து  பல தகவல்களைத் தெரிவித்தார்…

“’C2H’ நிறுவனத்தின் முதல் வெளியீடாக வர உள்ள ‘ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படம்

தமிழ்நாடு முழுவதும் 75 திரையரங்குகளில் வெளியாகும் வெளியான அன்றே இத்திரைப்படம் DVDயிலும் சட்டப்படி உரிமம் பெற்று வெளியாகும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் புதிய தமிழ் திரைப்படங்களை வெளியான அன்றே விநியோகம் செய்ய DVD பஜார் அமைப்பு மூலம் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையிலும், வீடுகளின் எண்ணிக்கை அடிக்கடையிலும் 154 விநியோகஸ்தர்கள் மற்றும் 5000 முகவர்கள் (DEALERS) நியமிக்கப்பட்டுவருகின்றனர்.

C2H நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் நடத்திய கணக்கெடுப்பின்படி 64 சதவீதம் பேர் இந்த C2H நிறுவனத்திற்கு ஆதரவும், DVDகளை வீடுகளில் வாங்குவதற்கான உறுதியும் அளித்துள்ளனர்..

எங்களது கணக்கெடுப்பினை கருத்தில் கொண்டு, ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படத்தின் முன்கூட்டிய விற்பனைக்கான இலக்கினை மக்களிடம் (PRE ORDER) வரும் ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் கணக்கெடுப்பு நடத்த இருக்கிறோம்..

C2Hல் வெளியாகும் திரைப்படங்களின் DVD மேலுறை வடிவமைப்பினை இன்று மக்களிடமும், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையிலும் வெளியிடுகிறோம்..

ஐயாயிரம் முகவர்களுக்கான பயிற்சி முகாம் சென்னை, கோயம்புத்தூர், சேலம், விழுப்புரம், திருச்சி, மதுரை, போன்ற ஒவ்வொரு மண்டலத்திலும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

முகவர்களுக்கான அடையாள அட்டை, கைப்பை, அனுமதிகடிதம் போன்றவற்றை C2H நிறுவனம் நேரடியாக வழங்க இருக்கிறது..

C2H நிறுவனம் திரைப்படங்களை SETTOP BOX மூலமாகவும் கேரளா, கர்நாடகா, மும்பை மற்றும் டெல்லி போன்ற இடங்களிலும் வெளியிடுகிறது.

C2Hல் வெளியாகும் திரைப்படங்களை குறைவான, சரியான விலையில் உலகளாவிய மக்களுக்கும் சட்டப்படி, சரியான முறையில் உயர்தர வீடியோ மற்றும் ஆடியோ தரத்தில் (1080P, 5.1) கொண்டு செல்ல ONLINE/ IPTV/OTT போன்ற தளங்களையும் நிறுவியுள்ளது

C2Hன் சட்ட ஆலோசனை குழுவில் ராஜா செந்தூர பாண்டியன், ஹரி சங்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.

திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் தயாரிப்பாளர் ஞானவேல், வழக்கறிஞர் ராஜவேலு, இயக்குனர்கள் அகத்தியன், சமுத்திரக்கனி, சசி, சுப்ரமணிய சிவா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழச்சி தங்கபாண்டியன், நடிகை அனுபமா குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.

C2Hல் வெளியாகும் முதல் படமான ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படத்தை சேரன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சர்வானந்த், நித்யா மேனன், சந்தானம், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொடர்ந்து வெளியாக உள்ள படங்கள்…

அர்ஜுனன் காதலி

தயாரிப்பு : SS MOVIE MAKERS, SIVASAKTHI PANDIAN
இயக்கம் : பார்த்தி பாஸ்கர்
இசை : ஸ்ரீ காந்த் தேவா
நடிப்பு : ஜெய், பூர்ணா

கோடிட்ட இடங்களை நிரப்புக

தயாரிப்பு : NIKKI PRODUCTIONS
இயக்கம் : பாலன்
நடிப்பு : புதுமுகங்கள்

வாராயோ வெண்ணிலாவே

தயாரிப்பு : ABHISHEIK FILMS
இயக்கம் : சசிதரன்
இசை : கார்த்திக் ராஜா
நடிப்பு : அட்டகத்தி தினேஷ், ஹரிப்ரியா

அப்பாவின் மீசை

தயாரிப்பு : DHAMINI CINEOGRAPHY
நடிப்பு : பசுபதி, சேரன், நாசர், நித்யா மேனன்
இயக்கம் : ரோகிணி
ஒலிப்பதிவு : ரசூல் பூக்குட்டி
இசை : அச்சு

தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகள், கட்டிட விளம்பர பலகைகள், சிற்றுந்து விளம்பரங்கள், வானொலி மற்றும் இணைய தள விளம்பரங்கள் மூலம் C2H திரைப்படங்களை விளம்பரப்படுத்த உள்ளோம்,” என்றும் சேரன் தெரிவித்தார்.

Read Previous

கடனை நாங்களே திருப்பிச் செலுத்தி விடுவோம் – ‘கோச்சடையான்’ தயாரிப்பாளர்…

Read Next

அப்பா பாராட்டு…தேசிய விருது – ‘கோலி சோடா’ விஜய் மில்டன்