மாண்டலின் இசைக் கலைஞர் மறைந்த மாண்டலின் யு.ஸ்ரீனிவாஸ் பிறந்த நாள் நினைவை முன்னிட்டு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், யு.ஸ்ரீனிவாஸ் சகோதரர் ராஜேஷ் இணைந்து ‘தி கிரேட் மாண்டலின்’ (The Great Mandolin – A Tribute To U.Shrinivas) என்ற இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளனர்.
சென்னை, மியூசிக் அகாடமியில் வரும் 28ம் தேதி இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு மாண்டலின் யு.ஸ்ரீனிவாஸ் பற்றிய ஒளி,ஒலி குறுந்தகட்டை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
அது மட்டுமல்ல நாட்டின் மிக உயரிய இசைக் கலைஞர்களைக் கொண்டு எஸ்எஸ் இன்டர்நேஷனல் லைவ் ஒரு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில், உஸ்தாத் ஜாகிர் உசேன், விக்கு விநாயகராம், அருணா சாய்ராம், ஹரிஹரன், சங்கர் மகாதேவன், சிவமணி, குணால் கன்ஜாவாலா, மாண்டலின் யு.ராஜேஷ், ரஞ்சித் பரோட், அனில் ஸ்ரீனிவாசன், செல்வகணேஷ், தேவி ஸ்ரீ பிரசாத், ஸ்டீபன் தேவசி, உமாசங்கர், ஹர்மீத் ஆகிய இசைக் கலைஞர்கள் அவர்களது இசை மூலம் மாண்டலின் யு.ஸ்ரீனிவாசுக்கு இசை மரியாதை செய்கிறார்கள்.
ரசிகப் பெருமக்களும், இசை ரசிகர்களும் இந்த அரிய இசை நிகழ்ச்சியை தவறாமல் கண்டுகளிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் எஸ்எஸ் இன்டர்நேஷனல் லைவ் இந்நிகழ்ச்சிக்கான அனுமதியை இலவசம் ஆக்கியிருக்கிறது.