விரைவில் ‘ஓ காதல் கண்மணி’…

o kadhal kanmani newsமணிரத்னம் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் டிரைலர் இன்று யு டியூப் மூலம் வெளியிடப்பட்டது.

‘மெளனராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’, ‘கீதாஞ்சலி’ மற்றும்’அலைபாயுதே’ உள்ளிட்ட படங்களில் இந்த வெற்றிக் கூட்டணியாக இருந்த மணிரத்னம், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீடண்டும் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

‘ரோஜா’ முதல் தொடர்ச்சியாக தனித்துவமான இசையைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் – மணிரத்னம் கூட்டணி இந்தப் படத்திலும் மீண்டும் இசை மாயம் செய்திருக்கிறார்கள். இவர்கள் கூட்டணியில் வெளியாகும்12வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஒ காதல் கண்மணி’ பாடல்களை மணிரத்னத்துடன் எப்போதும் இணைந்து பணியாற்றி வரும் வைரமுத்து எழுதி இருக்கிறார்.

துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் இப்படத்தில் நாயகன் மற்றும் நாயகியாக நடித்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஏப்ரல் மாதம் ‘ஓ காதல் கண்மணி’ வெளியாக உள்ளது.

Read Previous

நான் யார் ? – முன்னோட்டம்

Read Next

அனிருத் பாடிய ‘டண்டனக்கா…’ பாடல்…