‘காக்கா முட்டை’ குழுவினருக்கு தனுஷ் பாராட்டு…

‘காக்கா முட்டை’ திரைப்படம் சிறந்த குழந்தைகள் திரைப்படமாகவும், அந்தப் படத்தில் நடித்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாகவும் தேசிய விருதுகளைப் பெற்றனர்.

அந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

அதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் படக் குழுவினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து விருதுகளைப் பெற்ற சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ், படத்தின் இயக்குனரான மணிகண்டன் ஆகியோருக்கு தங்கச் சங்கிலி அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறனும் கலந்து கொண்டார். தேசிய விருது பெற்றதை கேக் வெட்டி அனைவரும் கொண்டாடினர்.

Read Previous

போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி…

Read Next

புதுப் படங்களில் ஒப்பந்தமாக ஸ்ருதிஹாசனுக்குத் தடை…