ஜோ ஸ்டார் என்டர்பிரைசஸ் சார்பில் கோட்டீஸ்வர ராஜூ தயாரிக்க முனைவர். விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘ஆகம்’.
இப்படத்தில் இர்ஃபான், ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், பிரேம், ரவி ராஜா மற்றும் பலர் நடிக்க தீக்ஷிதா நாயகியாக அறிமுகமாகிறாகர்.
R.V.சரண் ஒளிப்பதிவில், மனோஜ் கியான் படத்தொகுப்பில், ஜிநேஷ் வசனங்கள் எழுத, சதீஷ் குமார் கலையமைப்பில், விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
‘’ஆகம்’ திரைப்படம் வேலை வாய்ப்புச் சந்தையில் நடக்கும் பல கோடி மதிப்பிலான ஊழலைப் பற்றிய படம். சோஷியல் த்ரில்லர் பாணியில் தயாராக உள்ள இப்படத்தின் கதை பல வருட ஆய்வுக்குப் பின் எழுதப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கவுள்ள அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களுக்காகவும், படத்தில் உள்ள ஆழ்ந்த சமுதாய கருத்துக்காகவும் நடிக்க சம்மதித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
விரைவில் முதல் கட்ட படப்பிடிப்பைத் தொடங்க உள்ளோம். இப்படத்தில் பிரபல பிரெஞ்ச் நடிகை அலியோன முண்டேனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார், என்கிறார் இயக்குனர் முனைவர். விஜய் ஆனந்த் ஸ்ரீராம்.