‘வை ராஜா வை’ படத்தை வெளியிடும் ஸ்டுடியோ க்ரீன்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள ‘வை ராஜா வை’ படத்தை பிரபல படத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது.

மே 1ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த், டாப்ஸீ, டேனியல் பாலாஜி, மனோபாலா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘கொக்கி குமாரு’ என்ற ‘புதுப்பேட்டை’ கதாபாத்திரத்தில் தனுஷ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

‘ஓ காதல் கண்மணி, ரஜினி முருகன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ‘வை ராஜா வை’ படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையை வாங்கியுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட ‘கொம்பன்’ படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது சூர்யா, நயன்தாரா நடித்து வரும் ‘மாஸ்’ படத்தையும் தயாரித்து வருகிறார்கள்.

ஒரு பரபரப்பான ஆக்ஷன் – த்ரில்லர் கமர்ஷியல் படமாக ‘வை ராஜா வை’ உருவாகியுள்ளது.

Read Previous

‘அப்பா டக்கர்’ படத்திற்காக பாடிய சிம்பு

Read Next

36 Vayadhinile – Official Theatrical Trailer