மஞ்சப் பை – விமர்சனம்

படத்தைப் பத்தி பேசறதுக்கு முன்னாடி, லட்சுமி மேனன் பத்தி கொஞ்சம் பேசிடுவோம். பத்தாவது மட்டுமே படிக்கிற ஒரு பொண்ணு, தமிழ் சினிமாவுல அறிமுகமாகி, தொடர்ந்து வெற்றிப் படங்களா நடிச்சி, அட இது கூட அழகாதான் இருக்குன்னு பலரோட மனசை அள்ளின லட்சுமி மேனன் மேல இந்த படத்தோட கேமிரா மேன் மாசாணிக்கு அப்படி என்ன கோபம். இத்தனை படத்துல கஷ்டப்பட்டு சேர்த்த பேரை ஒரே படத்துல நாசமாக்கி, லட்சுமி மேனன் மனசை மட்டும் கஷ்டப்படுத்தாம, அவங்க ரசிகர்கள் மனசையும் சேர்த்து கஷ்டப்படத்திட்டீங்களே, இது நியாயமா ? அடுக்குமா ?. ஒரு சீன்லயாவது அவங்களை நல்லா காமிப்பீங்கன்னு நாங்களும் கடைசி வரைக்கும் பொறுமையா காத்திருந்தோம். ஆனா, எங்க ஆசையில மண்ணை அள்ளிப் போட்டுட்டீங்க… சரி, காமிரா மேன்தான் அப்படின்னு பார்த்தால், இயக்குனர் ராகவன், அவருக்கு நான் சளைத்தவரில்லைன்னு…சவசவன்னு சாதாரணமான காட்சிகளை வச்சி கடுப்பேத்தறாரு. ஒரு காதல் காட்சி….ம்…விமலும், லட்சுமி மேனனும் ஒண்ணு சண்டை போட்டுப் போறாங்க, இல்லை வந்து சண்டை போடறாங்க…பொண்ணுங்கன்னாலே டைரக்டருக்கும், காமிராமேனுக்கும் ஆகாது போல. பேசாம, எந்த பொண்ணுமே இல்லாம படத்தைக் கொடுத்திருக்கலாமே. விமல்…களவாணி-ன்னு ஒரு படம் ஓடிடுச்சி. அத வச்சிக்கிட்டு பாவம் இவரும் எத்தனை நாளைக்குத்தான் வண்டிய ஓட்டுவாரு. பேசறது கொஞ்சமாச்சும் புரியணுமே…என்ன பேசறாருன்னு அவருக்கே புரியாது போல. வேண்டாம், விமல் விட்டுருங்க..இல்லை கூத்துப் பட்டறைல திரும்பவும் போயி நடிப்பைக் கத்துக்குங்க… ராஜ்கிரண்தான் நம்மள அழ வைக்கிற ஒரே ஜீவன். அதுக்காக கொஞ்சம் கூட ஷேப் பண்ணாத பத்து நாள் தாடியோ, அழுக்கு டிரஸ்ஸோட, யதார்த்தம்கற பேர்ல அவரை நடிக்க வச்சிருக்கிறதுதான் ஓவரோ ஓவர். ஆனால், அதையெல்லாம் மீறி அவர் மட்டும்தான், அவரோட அருமையான நடிப்பால தனியா தெரியறாரு. இருந்தாலும் போலீசைப் போய் அடிக்கிற தைரியம்லாம் சினிமாவுல மட்டும்தான் நடக்கும். அப்புறம், அந்த கிளைமாக்ஸ்,  ஒரே ஒரு ‘காதல்’ படத்துக்கு மட்டும்தான்க அது செட் ஆகும்…ரொம்ப ஃபீல் பண்ணிட்டாரு போல டைரக்டரு. அம்மா இல்லாத லட்சுமி மேனன், அப்பா அம்மா இல்லாத விமல், அவரோட தாத்தா மேல வச்சிருக்கிற பாசத்தைக் கண்டு பொறமைப்படறதுலாம் எந்த வகையில நியாயம். இசை ரகுநந்தனாம். வர்ற வர்ற இளையராஜா இசையமைக்கிற பாடல்களை விட, அவர் இசையை காப்பி அடிக்கிறவங்க சுலபமா பேரை வாங்கிடறாங்க. இப்ப புதுசா ரகுநந்தனும் அந்த வரிசையில சேர்ந்திருக்காரு. ‘ஆகாச நிலவுதான்…,’ ‘பார்த்து பார்த்து….’ இரண்டு பாடலுமே டிபிக்கல் இளையராஜா காப்பி. ‘மஞ்சப் பை’ – ‘பை’ மட்டும் நிறைஞ்சா போதுமா மனசு நிறைய வேண்டாமா…  

Read Previous

உன் சமையலறையில் – விமர்சனம்

Read Next

தனுஷ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி…

Most Popular