அகோரி – விமர்சனம்

ராஜ்குமார் இயக்கத்தில், 4 மியூசிக்ஸ் இசையமைப்பில், சித்து சித், ஸ்ருதி ராமகிருஷ்ணன், சரத், மதனகோபால், வெற்றி, ரியாமிகா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

காட்டுக்குள் இருக்கும் ஒரு பழைய பங்களாவில் இருக்கும் பேய், அங்கு வந்து தங்கும் சிலர் என எத்தனையோ பேய்ப் படங்களைப் பார்த்திருக்கிறோம். அந்த விதத்தில் வந்துள்ள மற்றுமொரு பேய்ப் படம்தான் இது. ஆனாலும், அந்த வீட்டைக் காட்டிய விதத்திலும், சில காட்சிகளிலும் பயமுறுத்தியிருக்கிறார் இயக்குனர்.

ஒரு படத்திற்காக கதை எழுதுவதற்கு சித்து சித் மற்றும் அவரது நண்பர்கள் மூவர், தோழி ஒருவர் என காட்டிற்குள் இருக்கும் பழைய பங்களாவுக்கு போகிறார்கள். சினிமாவில் இயக்குனராக நினைத்து அது தோல்வியில் முடிந்ததால், அந்த பங்களாவில் ஏற்கெனவே தற்கொலை செய்து கொண்ட ஒரு உதவி இயக்குனரின் ஆவி, இவர்களை பயமுறுத்துகிறது. அந்த வீட்டிலிருந்தும் இவர்களால் தப்பிக்க முடியவில்லை. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

பேய்க் கதை என்றால் பயப்படுவதைத் தவிர வேறு எந்த உணர்வையும் வெளிப்படுத்த வேண்டியதில்லை. வீட்டில் சிக்கிக் கொள்ளும் அனைவருமே அதைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். சரத் மட்டும் ஓவராகப் பேசி எரிச்சலூட்டுகிறார். 

இடைவேளைக்குப் பின் திடீரென சாயாஷி ஷிண்டே கதாபாத்திரம் வந்து படத்தை வேறு பக்கம் நகர்த்துகிறது. 

பேய் எழுதிய கதையின் புத்தகத்திலிருந்து ஒவ்வொரு பக்கமாக வந்து, அது நிஜத்தில் நடப்பதும் புதிதாக உள்ளது. இந்த விஷயத்தை சமீபத்தில் வெளிவந்த தெலுங்கு வெப் சீரிசான ‘தூதா’வில் (காப்பியடித்து ?) வைத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் வசந்த், பின்னணி இசை அமைத்துள்ள 4 மியூசிக்ஸ் ஆகியோர்தான் இந்தப் படத்தை ரசிக்க முக்கியக் காரணம்.

Read Previous

கண்ணகி – விமர்சனம்

Read Next

இயக்குனருக்கு தங்க காப்பு அணிவித்த ஹரீஷ் கல்யாண்

Most Popular