ஒரு படத்திற்குள் 6 குறும் படங்கள், அதுதான் 6 அத்தியாம்.
சூப்பர் ஹீரோ, இனி தொடரும், மிசை, அனாமிகா, சூப் பாய் சுப்ரமணி, சித்திரம் கொல்லுதடி என்ற ஆறு குறும் படங்களும் பேயை மையமாக வைத்து கதை அமைத்திருக்கிறார்கள்.
இந்த ஆறு படங்களில் கடைசி இரண்டு படங்களான ‘சூப் பாய் சுப்ரமணி’ நகைச்சுவையாகவும், ‘சித்திரம் கொல்லுதடி’ படம் மிகவும் த்ரில்லாகவும் அமைந்து ரசிகர்களை ரசிக்க வைக்கின்றன.
மற்ற படங்களான ‘சூப்பர் ஹீரோ, இனி தொடரும், மிசை, அனாமிகா’ ஆகிய நான்கு படங்களும் சுமாரான கதையம்சத்துடன் படமாக்கப்பட்டுள்ளன.
இருந்தாலும் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அவரவர் கதாபாத்திரங்களில் ஜொலிக்கிறார்கள்.
ஒரு புதிய முயற்சி, இது போன்ற படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றால் பல புதியவர்கள் வெற்றி பெறுவார்கள்.
அத்தியாயம் 1
சூப்பர் ஹீரோ
இயக்கம் – கேபிள் சங்கர்
நடிப்பு – தமன்குமார், எஸ்.எஸ். ஸ்டான்லி
அத்தியாம் 2
இனி தொடரும்
இயக்கம் – சங்கர் வி தியாகராஜன்
நடிப்பு – பாப் சுரேஷ், பேபி சாதன்யா, திவ்யா
அத்தியாயம் 3
மிசை
இயக்கம் – அஜயன் பாலா
நடிப்பு – பசங்க கிஷோர், மதுஸ்ரீ, பிரசன்னா, கதிர், ராண்டில்யா
அத்தியாயம் 4
அனாமிகா
இயக்கம் – இஎவி சுரேஷ்
நடிப்பு – சஞ்சீவ், காயத்ரி, கேபிள் சங்கர்
அத்தியாயம் 5
சூப் பாய் சுப்ரமணி
இயக்கம் – லோகேஷ்
நடிப்பு – விஷ்ணு, பிரான்சிஸ்
அத்தியாம் 6
சித்திரம் கொல்லுதடி
இயக்கம் – ஸ்ரீதர் வெங்கடேசன்
நடிப்பு – வினோத் கிஷன் அரவிந்த் ராஜகோபால், சோமு சுந்தர்