கேரளாவின் பாரம்பரிய உணவுகளுக்கு உலகம் முழுவதும் தனி வரவேற்பு இருந்து வரும் நிலையில், அந்த மண்ணின் உணவு கலாச்சாரத்தையும் பாரம்பரிய சுவையையும் பாதுகாத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதியினருக்கு சொந்தமான ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகம்.
கேரள உணவுகளை விரும்பி சாப்பிடும் சென்னைவாசிகளுக்கும், இங்கு வசிக்கும் மலையாளிகளுக்கும் பாரம்பரிய கேரள சுவையை வழங்கும் நோக்கில், ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் புதிய கிளை சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார். விழாவில் திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நடிகர்கள் அசோகன், ஷாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் அசோகன், ரியாஸ் கான், நடிகைகள் மீனா, ஷாரதா, ஷீலா, சீமா, ராதிகா சரத்குமார், மிர்னா, பூர்ணிமா பாக்யராஜ், கிகி விஜய், சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்டின், இயக்குநர் பிரியதர்ஷன், தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி, சிவா, விஜயகுமார், ரவி கொட்டாரக்கரா, Seven Arts விஜயகுமார், Prince Pictures வெங்கடேஷ், ஏ.வி. அனூப், மினி ஸ்டூடியோ வினோத் குமார் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். மேலும் பாடகர்கள் ராகேஷ் பிரம்மானந்தன், சுஜாதா மோகன், நடன இயக்குநர்கள் கலா மாஸ்டர், சாண்டி மாஸ்டர், ஸ்டண்ட் மாஸ்டர்கள் கனல் கண்ணன், மாஃபியா சசி, ஒளிப்பதிவாளர் அபினந்தன் ராமானுஞ்சன், டாக்டர் சைதன்யா, டாக்டர் கே. கிரீஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் முக்கிய சிறப்பம்சமாக 80 வகையான புட்டுகள் வழங்கப்படுகின்றன. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் புட்டுகளுடன், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பிரபலமான உணவு வகைகளும் இங்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகம் தனது கிளைகளை விரிவுபடுத்தியுள்ளது. துபாய், சார்ஜா, ஜெட்டா, தோஹா உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
சென்னை அண்ணா நகரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கிளையின் உட்புற வடிவமைப்பும் கேரளாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கேரள உணவுகளுடன், 80 விதமான புட்டுகளை ஒரே இடத்தில் ருசிக்கும் வாய்ப்பு இருப்பதால், உணவுப் பிரியர்களிடையே இந்த புதிய கிளை கவனம் ஈர்த்து வருகிறது.