யூகி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

ஜுவிஸ் புரொடக்ஷன்ஸ், யுஎஎன் பிலிம் ஹவுஸ், ஏஏஏஆர் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் ‘யூகி’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

மலையாளத்தில் ‘பாரன்சிக், கலா’ போன்ற வெற்றிப் படங்களைத் தந்த இந்த நிறுவனங்கள் இப்படத்தைத் தயாரிக்கிறது. 

இப் படத்தில்  கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மைக்  கதாபாத்திரங்களில்  நடிக்கிறார்கள். 

தென்னிந்திய நட்சத்திர நடிகர்களான, பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ்காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

பாக்கியராஜ் ராமலிங்கம் திரைக்கதை எழுதுகிறார், புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களுக்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, டான் வின்சென்ட் பின்னணி இசையமைக்கிறார்.

பன்மொழிகளில் தயாராகும் இப்படம் கோவிட் பொது முடக்க காலத்தில், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் முறையாகக் கடைப்பிடித்து, சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

Read Previous

நெற்றிக்கண் – விமர்சனம்

Read Next

இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த கங்கை அமரன்

Most Popular