1800 தியேட்டர்களில் திரையிடப்பட்ட சமந்தாவின் ‘யசோதா’ டீசர்

ஸ்ரீதேவி மூவீஸ் தயாரிப்பில், ஹரி – ஹரிஷ் இயக்கத்தில், மணிசர்மா இசையமைப்பில், சமந்தா, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘யசோதா’.

இப்படத்தின் டீசர் இன்று யு டியூபில் வெளியிடப்பட்டது. அது மட்டுமல்ல இந்திய அளவில் 1800 தியேட்டர்களில் இந்த டீசர் திரையிடப்பட்டது.

கர்ப்பிணிப் பெண்ணான சமந்தா, பெண் மருத்துவர் பரிந்துரைத்தும் பார்க்கக் கூடாத ஒன்றைப் பார்த்து விடுகிறார். குழப்பமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் சமந்தா சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், உயிர் பிழைக்க போராடுவதை டீசர் காட்டுகிறது. அவரைச் சுற்றி என்ன நடக்கிறது ? அவர் ஏன் போராடுகிறார் ?, அவர் எதை வெளிப்படுத்த பாடுபடுகிறார் ? அதுதான் படத்தின் சுவாரசிய மர்மம் என்கிறார் படத் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத்.

அவர் மேலும் கூறுகையில், "எங்கள் டீசருக்கு நாடு முழுவதும், அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. நாடு முழுவதும் 1800+ திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதல் 'டீசர்' இது தான். திரையரங்குகளிலும் சமூக ஊடகங்களிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

சமந்தாவின் நடிப்பு மற்றும் பிரம்மாண்ட உருவாக்கம் பற்றிய பாராட்டுக்களைக் கேட்பது மிகுந்த மகிழ்ச்சி. சமந்தா மிகச் சிறப்பான அர்ப்பணிப்பு மிக்க உழைப்பால் இப்படத்தை சமரசமற்ற ஆக்‌ஷன் த்ரில்லராக மாற்றியுள்ளார். இந்தக் கதையே மிகவும் தனித்துவமானது. நீங்கள் பார்க்கும் டீசர் படத்தின் ஒரு துளி மட்டுமே. இன்னும் பல ஆச்சரியங்கள் படத்தில் காத்திருக்கிறது. எந்த சமரசமுமின்றி சிறந்த தொழில் நுட்பத் தரத்தில் 100 நாட்களில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்துள்ளோம். 

டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. VFX மற்றும் ரீரெக்கார்டிங் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தினை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம்," என்கிறார்.

Read Previous

‘சூர்யா 42’ மோஷன் போஸ்டர் வெளியீடு, ரசிகர்கள் ஆர்வம்

Read Next

லில்லி ராணி – விமர்சனம்

Most Popular