விஜே சித்து இயக்கி நடிக்கும் ‘டயங்கரம்’

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தனது அடுத்த முயற்சியாக விஜே சித்து எழுதி இயக்கி நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தைத் தயாரிக்க உள்ளது.

 *டயங்கரம் ” என்கிற இந்தப் படம் விஜே சித்துவின் யூடியூப் வீடியோக்களில் பிரபலமாக பயன்படுத்திய வசனத்தை தலைப்பாகக் கொண்டுள்ளது. அந்த வார்த்தைக்கு இப்போது திரையில் புதிய பரிமாணத்தில் அதிரடியும் உணர்ச்சி கலந்த கலகல காலேஜ் கேம்பஸ் குரலாக உருவாகிறது. 

சமூக ஊடகங்களில் தனது வீடியோக்கள் மூலம் பிரபலமான விஜே சித்து சினிமா இயக்குனராகவும் ஹீரோவாகவும் புதிய அவதாரம் எடுத்திருப்பது அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய படிக்கல் ஆகும்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் ஐசரி கே கணேஷ் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கூறியதாவது…

பிரதீப் ரங்கநாதன், ஆர் ஜே பாலாஜி போன்ற அறிமுக இயக்குனர்களையும் நடிகர்களையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது வேல்ஸ் நிறுவனத்தின் பெருமை. அதைப் போலவே இப்போது விஜே சித்துவை அறிமுகப்படுத்துவது உற்சாகத்தை தருகிறது. இன்றைய இளைஞர்களின் குரலாகவும் நேர்மையான அழுத்தமான என்டர்டெய்னராகவும் அவர் திகழ்வார். 

தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டு விஜே சித்து கூறியதாவது…

சினிமா எப்போதுமே எனது கனவு. எப்போது எப்படி என்று தெரியவில்லை. ஆனால் ஒருநாள் கண்டிப்பாக அடையப்போகிறேன் என்ற நம்பிக்கையோடு வந்தேன், யூடியூப்-காக வீடியோஸ் எடுக்கிற இடத்தில் இருந்து செட்டில் ஆக்சன் சொல்ற இடத்துக்கு வந்திருக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது. “டயங்கரம் “ஒரு படம் மட்டும் இல்லை அது என் குரல், என் கோபம், என் ஸ்டைல், என் வாழ்க்கை, உங்களோட அதை நான் பகிர்ந்து கொள்வது ரொம்ப சந்தோசமா இருக்கு,” என்றார். 

 

Read Previous

‘கஜானா’ போன்ற அட்வென்ச்சர் படம் வந்ததில்லை – வேதிகா

Read Next

தீபாவளி வெளியீடாக ‘பைசன்’