தமிழ் சினிமாவின் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான “விக்ரம் 63” படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
நடிகர் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். முன்னதாக “இருமுகன்” திரைப்படத்தின் மூலம் வெற்றிகரமான கூட்டணியை வழங்கிய விக்ரம் – ஆனந்த் சங்கர் கூங்டடணி மீண்டும் இந்தப் படம் மூலம் இணைகிறார்கள். இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
அனைவரும் ரசிக்கும் வகையிலான பேமிலி திரில்லர் ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளது. விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களையும் கவரும் வகையிலான உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான திரில்லர் திரைக்கதை மற்றும் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இணைந்த முழுமையான விருந்தாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் எம்எஸ் பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பதும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அவரது இசை, படத்தின் உணர்ச்சி மற்றும் திரில்லர் அம்சங்களை மேலும் உயர்த்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொழில்நுட்பக் குழுவிலும் பல முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் ISC, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், வசன எழுத்தாளராக ஷான் கருப்புசாமி, சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, நடன அமைப்பாளராக பிருந்தா, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, விளம்பர வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா மற்றும் ஸ்டில்ஸ் புகைப்படக் கலைஞராக தேனி முருகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.