பிரைம் வீடியோவில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ”ஃபார்ஸி”

தி ஃபேமிலி மேன் ஐ உருவாக்கிய படைப்பாளிகளின் அடுத்த உருவாக்கம்தான் ஃபார்ஸி. திரைப்படம். ராஜ் & DK இன் தயாரிப்பு நிறுவனமான  D2R ஃபிலிம்ஸின் கீழ் தயாரிக்கப்பட்ட,  இந்த தொடரானது ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ளது.

இந்தத் தொடரில் ராஷி கண்ணா,  கே கே மேனன்,  அமோல் பலேகர், ஆகியோருடன் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் புதுமுக நடிகர் புவன் அரோராவும்  முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர். 

க்ரைம் திரில்லர் வகைகளிலேயே ஒரு தனித்துவமான கதைக்களத்தோடு இயக்குனர் இரட்டையர்களின் அடையாளமாகத் திகழும் நகைச்சுவை காட்சிகள் அடங்கிய இது,  எட்டு எபிசோட்களில் படமாக்கப்பட்டிருக்கிறது.  

சீதா ஆர் மேனன் மற்றும் சுமன் குமார் இருவரும் ராஜ் & டிகே யுடன் இணைந்து , ஃபார்ஸி  ஐ எழுதியுள்ளனர்.

ப்ரைம் வீடியோவில் வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த ஃபார்ஸி தொடர்.

Read Previous

வாரிசு – டிரைலர்

Read Next

பிளாக் ஷீப் டிவிக்காக ரயில் வண்டியில் ஸ்டிக்கர்ஸ்