2ஆம் கட்ட படப்பிடிப்புக்கு தயாரான “குஷி” படக்குழு

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடிக்கும் 'குஷி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர்  தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'குஷி'. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து, இயக்குநர் சிவ நிர்வானா- நடிகர் விஜய் தேவரகொண்டா – ' ஹிருதயம்' படம் புகழ் இசைமைப்பாளர் ஹேஷாம் ஆகியோர் அண்மையில் முக்கியமான சந்திப்பு ஒன்றினை நடத்தி, விரிவாக விவாதித்தனர்.

இதனைத் தொடர்ந்து 'குஷி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குவது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. 

இதனால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும்  'குஷி' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதனை 'குஷி' படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. 

Read Previous

வசந்த கால நதிகளிலே.. என்றென்றும் வாணியம்மா..

Read Next

கருமேகங்கள் கலைகின்றன படத்தில் கவுரவ வேடத்தில் தங்கர்பச்சான்