விஜய் 66 – கதாநாயகி ராஷ்மிகா, இசையமைப்பாளர் தமன்

தமிழ், தெலுங்கில் விஜய் கதாநாயகனாக நடிக்க உருவாக உள்ள விஜய்யின் 66வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் செப்டம்பர் மாத வெளியானது.

தமிழில் வெளிவந்த ‘தோழா’ படம் மற்றும் தெலுங்கில் சில வெற்றிப் படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இப்படத்தை இயக்குவதாக அப்போது அறிவித்தார்கள். படக்குழுவினர், மற்ற நடிகர், நடிகையர் அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றார்கள்.

சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்று படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா என்று முதலில் அறிவித்தார்கள். இன்று ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியானது.

அதே சமயம் அடுத்த அறிவிப்பாக படத்தின் இசையமைப்பாளர் தமன் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்கள். அடுத்தடுத்து வெளியான இரண்டு அப்டேட்டுகளால் விஜய் ரசிகர்கள் குஷியாக உள்ளார்கள்.

விஜய்யின் 66வது படத்தில் விஜய் – வம்சி, விஜய் – ராஷ்மிகா, விஜய் – தமன் என எல்லாமே புதிய கூட்டணியாக அமைந்துள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

Read Previous

சிரபுஞ்சியில் படமாக்கப்பட்ட ஆன்ட்ரியா நடிக்கும் ‘நோ என்ட்ரி’

Read Next

புதிய தொடர்களை அறிமுகப்படுத்தும் ஜீ 5