100 கோடி வசூலைக் கடந்த ‘விடாமுயற்சி‘
10 Feb 2025
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் பலர் நடிப்பில் பிப்ரவரி 6ம் தேதி வெளியான படம் ‘விடாமுயற்சி’.
இப்படத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்து கடந்த நான்கு நாட்களாக வெற்றிகரமாக ஓடி வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. வெளிநாடகளில் 30 கோடிக்கும் அதிகமாகவும், மற்ற மாநிலங்களில் 10 கோடிக்கும் அதிகமாகவும் வசூலித்து நான்கு நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags: vidamuyarchi