பிப்ரவரி 14ம் தேதி 10 படங்கள் ரிலீஸ்
10 Feb 2025
2025ம் ஆண்டு ஆரம்பமாகி 40 நாட்கள் ஓடிவிட்டது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் தமிழில் 26 படங்கள் வெளியாகின.
இந்த பிப்ரவரி மாதம் முதல் வாரமான கடந்த வாரம் பிப்ரவரி 6ம் தேதி அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் வெளியானது.
இந்த வாரம் பிப்ரவரி 14ம் தேதி வெள்ளியன்று மொத்தம் 10 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் இத்தனை படங்கள் வெளிவந்தால் அவற்றிற்கான தியேட்டர்கள் எப்படி கிடைக்கும், எந்தப் படத்தை ரசிகர்கள் தேர்வு செய்து பார்ப்பார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை.
ஏற்கெனவே ‘விடாமுயற்சி’ படமும் ஓடிக் கொண்டிருப்பதால் இத்தனை படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதிலும் கடும் சிரமம் இருக்கும். தமிழ் சினிமாவில் இரண்டு தயாரிப்பாளர்கள் சங்கம் செயல்பாட்டில் இருந்தாலும் திரைப்பட வெளியீடுகள் குறித்து எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் இருக்கிறது. இவற்றை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்றுதான் பல தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள்.
இந்த வாரம் பிப்ரவரி 14ல், “2 கே லவ் ஸ்டோரி, 9 எஎம் டூ 9 பிஎம் வேலண்டைன்ஸ் டே, அது வாங்கினால் இது இலவசம், பேபி & பேபி, படவா, தினசரி, பயர், காதல் என்பது பொதுவுடமை, கண்நீரா, ஒத்த ஓட்டு முத்தையா” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
Tags: tamil cinema