மீண்டும் மலையாளப் படத்தில் நயன்தாரா
10 Feb 2025
தமிழில் நம்பர் 1 நடிகையாக இருக்கும் நயன்தாரா மலையாளத் திரையுலகத்திலிருந்துதான் தமிழ்த் திரையுலகம் பக்கம் வந்தார்.
இங்கு தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார். எப்போதாவதுதான் தனது தாய்மொழியான மலையாள சினிமாவில் நடிப்பார். கடைசியாக 2022ல் வெளிவந்த ‘கோல்டு’ படத்தில் நடித்திருந்தார்.
தற்போது மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால், பகத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் நயன்தாரா.
9 வருடங்களுக்குப் பிறகு மம்முட்டியுடன், 22 வருடங்களுக்குப் பிறகு மோகன்லாலுடன் நடிக்கிறார் நயன். மம்முட்டி, மோகன்லால் இருவரும் 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வருகிறது.
டெல்லி, ஹைதராபாத், அபுதாபி, தாய்லாந்து ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
Tags: nayanthara, mammotty, mohanlal