சாம் சிஎஸ் பற்றி பேச மறந்த அல்லு அர்ஜுன்
10 Feb 2025
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப்ப டம் ‘புஷ்பா 2’.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தாலும், பின்னணி இசையின் போது அவருக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இடையே மனக் கசப்பு ஏற்பட்டது.
அதனால், படத்தின் கிளைமாக்ஸ் உள்ளிட்ட சில முக்கிய காட்சிகளுக்கு சாம் சிஎஸ் பின்னணி இசை அமைத்திருந்தார்.
சுமார் 1800 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து பெரும் வெற்றிப் படமாக இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பு இரு தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அப்போது இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பற்றி படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார் ஆகியோர் எதுவுமே பேசவில்லை. அவர்கள் இருவருமே சாம் சிஎஸ் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிட்டுப் பேசவில்லை.
சரியான சமயத்தில் படத்தின் பின்னணி இசையை முடித்துக் கொடுத்து உதவிய சாம் சிஎஸ் பற்றி ஒரு வார்த்தையாவது பேசியிருக்கலாம் என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்ளும் அவர்களது வருத்தத்தை வெளியிட்டுள்ளனர்.
Tags: pushpa 2, allu arjun, sam cs