அரசன் - விறுவிறுப்பாக நடக்கும் அடுத்த கட்ட படப்பிடிப்பு

17 Mar 2026

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிலம்பரசன் நடிப்பில்,  வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.

இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதை பிரத்யேக புகைப்படத்துடன் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் சிலம்பரசன்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் இந்த கிரைம் ஆக்சன் திரில்லரில் சிலம்பரசன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஜெர்மியா, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

அண்மையில் மதுரையில் நடைபெற்ற முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இதில் ‘மதுரை டைகர்’ என்ற கதாபாத்திரத்தில் கபடி வீரராக சீருடை அணிந்து சிலம்பரசன் நடித்திருந்தார். தற்போது சென்னை தி நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

வெற்றிமாறனின் வடசென்னை சினிமாடிக் யுனிவர்ஸின் அடுத்த பாகமாக உருவாகும் ‘அரசன்’ படத்தின் கதையை ‘பொல்லாதவன்’க்கு முன்பே இயக்குநர் எழுதி முடித்திருந்தார். இதனால் படப்பிடிப்பு எந்தவித தடையுமின்றி நடைபெற்று, இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

 

Tags: arasan, vetrimaaran, silambarasan, anirudh

Share via: