பெரும் வரவேற்பைப் பெற்ற வெங்கட் பிரபுவின் “கஸ்டடி” பட க்ளிம்ப்ஸ்

நாக சைதன்யா தற்போது வெங்கட்பிரபுவின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'கஸ்டடி'யில் நடித்து வருகிறார். கிரீத்தி ஷெட்டி படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. 

சமீபத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. படத்தின் க்ளிம்ப்ஸை புது வருட பரிசாக பார்வையாளர்களுக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. நாகசைதன்யாவின் ஆக்‌ஷன் தோற்றம் மற்றும் படத்தின் சில விஷூவல்களையும் படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. 

இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை க்ளிம்ப்ஸின் தரத்தை மேலும் உயர்த்துவதாக உள்ளது.

அரவிந்த்சாமி, ப்ரியாமணி, சரத்குமார், வெண்ணிலா கிஷோர் மற்றும் ப்ரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

'கஸ்டடி' திரைப்படம் மே 12, 2023-ல் திரையரங்குகளில் வெளியாகிறது. அதிக பொருட்செலவிலான தயாரிப்பு மற்றும் உயர்தரமான தொழில்நுட்பத்துடன் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி படத்தைத் தயாரித்துள்ளார். 

Read Previous

டாடா படத்தைக் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் நிறுவனம்

Read Next

பூமிக்கடியில் 5500 சதுர அடி செட் அமைத்த “ரூட் நம்பர் 17” படக்குழு