வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் 'வலிமை'.
கொரோனா ஊரடங்கு முடிந்த பின், கொரோனா தொற்று முழுமையாக ஒழிந்த பின் தான் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம் ஆகும் என தெரிகிறது .
இப்படத்தின் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார்.
இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் வலிமை படத்திற்காக தான் வலிமையை சிக்ஸ் பேக்காக ஏற்றி வருகிறார் கார்த்திகேயா.
இது குறித்து ட்விட்டரில், "லாக் டவுன் நமது திட்டங்களை மாற்றிவிட்டது, ஆனால் நமது லட்சியத்தைத் தடுக்க முடியாது" என்று கார்த்திகேயா கூறியுள்ளார்.