பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’, சன் நெக்ஸ்ட் ஓடிடியில் நேரடி வெளியீடு

தென் இந்தியாவின் முன்னணி OTT தளமான Sun NXT, தனது பிரபலமான Direct-to-Sun NXT பிரீமியர் பட்டியலில் அடுத்ததாக ஒரு  அதிரடியான திரில்லரை வெளியிட உள்ளது.

டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை முதல், நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் ஜானரில் உருவான ‘உன் பார்வையில்’ படத்தை,  Sun NXT-இல் மட்டும் நேரடியாகக் கண்டுகளிக்கலாம். 

இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக  அழுத்தமிக்க உணர்ச்சிகரமான பாத்திரத்தில், நடிகை பார்வதி நாயர் நடித்துள்ளார்.  கணவர் மற்றும் இரட்டை சகோதரிகளின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடும் அவரது பயணம், ரகசியங்களும் திருப்பங்களும் நிரம்பிய ஒரு மர்ம உலகுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.

தன்னுடைய வலுவான நடிப்பால் படத்தை முழுவதுமாக தாங்கிச் செல்லும் பார்வதி நாயரின் நடிப்பு, படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. திரைக்கதையின் மர்ம மரணங்களின் விசாரணை பக்கத்தில், முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்துள்ளார். கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிழல்கள் ரவி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

படம் பற்றி நடிகை பார்வதி நாயர் கூறியதாவது.., 

“பார்வையற்ற பெண்ணாக நடிப்பது சவாலானதும், அதே நேரத்தில் மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாகவும் இருந்தது. டிசம்பர் 19 அன்று ‘உன் பார்வையில்’ படத்தை Sun NXT-இல் நேரடியாக நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ்வதைக் காண, ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார்.

Read Previous

மாண்புமிகு பறை – விமர்சனம்

Read Next

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு