SVM புரொடக்ஷ்ன்ஸ் சார்பாக V.மகேஷ்வரன் தயாரிக்கும் புதிய படம் ‘உலகம்மை’.
‘காதல் FM, குச்சி ஐஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் பிரகாஷ் இப்படத்தை இயக்குகிறார்.
‘96, மாஸ்டர்’ படங்களில் நடித்த கௌரி கிஷன் முதன்மை கதாநாயகியாக நடிக்கிறார். வெற்றி மித்ரன் கதாநாயகனாக நடிக்க, மாரிமுத்து, G.M.சுந்தர், பிரணவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
1970ல் நடைபெற்ற சாதிய பிரச்சனையை மையமாகக் கொண்டு நெல்லை பின்னணியில் நடக்கும் கதைதான் ‘உலகம்மை’.
பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்படும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.